அஞ்சல்துறை சேவையில் குறைபாடா? – திருச்சியில் வருகிற 15-ம் தேதி நடக்கும் குறைதீர் முகாமில் தெரிவித்து பயன்பெறலாம்…!
அஞ்சல் துறை சார்பில், திருச்சி தலைமை அஞ்சலகத்தில் மண்டல அளவிலான குறை தீர்க்கும் முகாம் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், அஞ்சல்துறை தொடர்பான புகார்களை உரிய சான்றுகளுடன் அளிக்கலாம். புகார் மனுவுடன் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண் ஆகியவற்றுடன் எந்த வகையிலான தபால் (மணியார்டர், விரைவு தபால், பதிவு தபால்) குறித்த விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும். இந்த குறை தீர்க்கும் முகாமில் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் அளித்த பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் இந்த முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
இத்தகவலை திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

Comments are closed.