கோவில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி திருச்சி தொல்லியல் துறை அலுவலகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம்…!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில் மற்றும் மானம்பாடி நாகநாதர் சுவாமி கோயிலின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆகம விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஐராவதீஸ்வரர் கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் ராம நிரஞ்சன் தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் திருச்சி, தெப்பக்குளம் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ராம நிரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், மானம்பாடி நாகநாதர் கோயிலில் சேதமடைந்த பகுதிகளை வருகிற மகாமக திருவிழாவிற்கு முன்பாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆகம விதிமுறைகளை மீறி செயல்படும் ஐராவதீஸ்வரர் கோயில் குருக்கள் பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
Comments are closed.