மின் இணைப்பு வழங்க லஞ்சம் – அய்யாக்கண்ணு குற்றச்சாட்டால் விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் சலசலப்பு ! ( வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று டிஆர்ஓ ராஜலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேச எழுந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் தரவில்லை என்றால் இணைப்பு தர மறுக்கிறார்கள். அனைவரும் லஞ்ச வாதிகள் எனக்கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் எதிர்க்குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டி.ஆர்.ஓ ராஜலட்சுமி தலையிட்டு இது போன்று பொது வெளியில் பேச கூடாது யார் லஞ்சம் வாங்கினார்களோ ? அவர்கள் பெயர்களை குறிப்பிட்டு மனுவாக கொடுங்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அய்யாக்கண்ணுக்கு அறிவுறுத்தினார்.அதன் பின் அனைவரும் அமைதியாகினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Comments are closed.