Rock Fort Times
Online News

திருச்சி,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அடியார்கள் குழாம் அமைப்பினர் தர்ணா போராட்டம்! ( வீடியோ இணைப்பு )

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இடமாற்றம் செய்யப்பட்ட கம்பத்தடி ஆஞ்சிநேயா் சிலையை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யக் கோரி அடியார்கள் குழாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று கொடிமரத்தின் அருகே அமா்ந்து பாடல்களை பாடி தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோயில் ஆரியபடாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலை உள்ளது. மிகவும் பழைமையான இந்த சிலை கடந்த 2015-ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்தால் நகா்த்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பெருமாள் அடியாா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, மீண்டும் அதே இடத்தில் ஆஞ்சனேயா் சிலையை வைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலை துறை  மற்றும் கோவை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் ஆஞ்சிநேயா் சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும் தற்போது கம்பத்தடி ஆஞ்சிநேயா் சிலை அருகே 200க்கும் மேற்பட்ட பெருமாள் அடியாா்கள் அமைப்பைச்  சேர்ந்தவர்கள் பெருமாள் பாடல்களை பாடியப்படி சுமாா் 2 மணி நேரம் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்