திருப்பூர் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சுதாரிப்பால் உயிர் தப்பிய பயணிகள் ( வீடியோ இணைப்பு )
திருப்பூரில் இருந்து நேற்றிரவு அரசு விரைவுப் பேருந்து ஒன்று,திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தாராபுரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துனர் சிகாமணி (60) துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த 52 பயணிகளையும் உடனடியாக கீழே இறக்கிவிட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சில நிமிடத்திற்குள் பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீயால் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. . பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2- மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Comments are closed.