Rock Fort Times
Online News

கோவையில் பரபரப்பு சம்பவம்: தலைமை காவலரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு…!

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவை பந்தயசாலைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில் கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்திருந்தது. இதன் காரணமாக ஆல்வினை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர் கோவை கொடிசியா பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் இன்று(21-09-2024) அதிகாலை அங்கு சென்று ஆல்வினை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆல்வின், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர் ராஜீவ் குமாரை தாக்கி கையில் குத்தி கிழித்து விட்டு தப்பி ஓட முயன்றார். உடனே, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ரவுடி ஆல்லினை துப்பாக்கியால் சுட்டார். இதில், அவருக்கு காலில் குண்டு பாய்ந்து சரிந்து கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து, காயமடைந்த ரவுடி ஆல்வினையும், தலைமை காவலர் ராஜீவ் குமாரையும் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமைக் காவலரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற பிரபல
ரவுடியை போலீசார் துப்பாக்கியால் கட்டு பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்