திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கத்தில் இலவச இருதய மருத்துவ முகாம் இன்று ( செப்.20 ) நடந்தது. இம்மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் சியாம் சுந்தர் ,விஜய் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர் .முகாமில் ரத்த சர்க்கரை அளவு, உயர் ரத்த பரிசோதனை, எடை சரிபார்த்தல், கண் மற்றும் பல் மருத்துவ ஆலோசனை, இ.சி.ஜி ,எக்கோ கார்டியோகிராம் சோதனை ஆகியவை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சுகுமார், துணை தலைவர் மதியழகன், இணைச்செயலாளர் சந்தோஷ் குமார், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், அரசு வழக்கறிஞர் சவரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.