இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ந்த நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கான யுபிஐ பணப்பரிவர்த்தனை வரம்பு இன்று (16-09-24) முதல் உயர்கிறது. வரி செலுத்துதலுடன் சீரமைக்கப்பட்டுள்ள பிரிவுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு, 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவம், கல்வி, பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றுக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வரம்பு, நாளொன்றிற்கான ரூ.1 லட்சம் என்ற உச்சவரம்பு, இன்று முதல் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட பிரிவினர்கள், யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.