திருச்சி, பஞ்சப்பூரில் நில அபகரிப்பில் ஈடுபட்ட ரவுடி! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எஸ்.பி வருண்குமார்!
திருச்சி,பஞ்சப்பூர் பகுதியில் நிலம் அபகரிப்பில் ஈடுபட்ட ரவுடி கொட்டப்பட்டு செந்திலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். .
திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வரவிருப்பதால், அப்பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி, அங்கு உள்ள நில உரிமையாளர்களிடம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த செந்தில், சாத்தனூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை இருவரும் பொதுமக்களை மிரட்டியும், போலி பத்திரங்களை தயார் செய்தும் நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை ஆகிய 2 பேர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொட்டப்பட்டு செந்திலை பிடிக்க போலீசார் முயன்றபோது செந்தில் தப்பிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பிடிப்பட்ட கொட்டப்பட்டு செந்தில் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்து வரும் அண்ணாமலையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.