அகமதாபாத்தில் ஐபிஎல் தொடக்க விழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலில் இந்தி பாடகர் அரிஜித் சிங், கிடார் கருவி இசைத்தபடி இசைவெள்ளத்தில் பாட்டு பாடி உற்சாகப்படுத்தினார். நடனமாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். பின்னர் நடிகை ராஷ்மிகா, புஷ்பாபடத்தில் இடம் பெற்ற ‘சாமி…சாமி’, மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்…நாட்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்களுக்காக கலர்புல் உடையில் நடனமாடி பரவசப்படுத்தினார். குழுமியிருந்த ஏறக்குறைய ஒரு லட்சம் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அரங்கமே குலுங்கியது. அதைத் தொடர்ந்து முதல் ஆட்டத்திற்குரிய கேப்டன்கள் டோனி (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (குஜராத்) அலங்கரிக்கப்பட்ட பேட்டரி காரில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டு கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாணவேடிக்கைகள் நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவுபெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழ் நடிகை தமன்னா பலகலவை பாடல்களாக ‘மனசோ இப்போ தந்தியடிக்குது’, புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded