இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவுக்கான டி-20 உலகக் கோப்பை, கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில், ஜடேஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார். ரிவாபா, தனது எக்ஸ் பக்கத்தில் அவருடைய பாஜக உறுப்பினர் அட்டையையும், ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.