அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி: திருச்சி மேற்கு மாநகர திமுக கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்.கே.எஸ். மஹாலில் அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இன்று(02-09-2024) நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கழக மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளார். கட்சிக்காக உழைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வேண்டிய உதவிகளை செய்வார். நான் லால்குடி தொகுதியை விட்டு திருச்சி மேற்கு தொகுதிக்கு வந்து நீண்ட காலமாகி விட்டது. எனவே, என்னுடைய காலம் இனி இங்கு தான். உங்களை நம்பி தான் இருக்கிறேன். நிச்சயம் உங்களை நான் மறக்க மாட்டேன். நன்றியுடன் இருப்பேன்.திருச்சி எம்பி தொகுதியை நீண்ட காலமாக திமுக பெறாமல் இருந்து வருகிறது. வருங்காலத்தில் திருச்சி எம்பி தொகுதியை திமுக கேட்டுப்பெறும் என்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, சேர்மன் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ் மற்றும் வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், நிர்வாகிகள் முத்துச் செல்வம், விஜயா ஜெயராஜ், டோல்கேட் சுப்பிரமணி, மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கோட்ட தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், கமால் முஸ்தபா, நாகராஜன் இளங்கோ, ராம்குமார் மற்றும் செவந்திலிங்கம், தில்லைநகர் கண்ணன், இளைஞரணி ஆனந்த், அயலக அணி மாநகர அமைப்பாளர் துபேல் அகமது, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, புத்தூர் பவுல்ராஜ், என்ஜினியர் நித்தியானந்த், டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, மகளிர் அணி கவிதா, தொ.மு.ச. குணசேகரன், அரவானூர் தர்மராஜன், கவுன்சிலர்கள் மஞ்சுளாதேவி , புஷ்பராஜ், ராமதாஸ், சுபா, கலைச்செல்வி கருப்பையா, கவிதா செல்வம், செல்வி மணி, அந்தோணிசாமி, வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ், பி.ஆர்.பாலசுப்பிர மணியன், மார்சிங் பேட்டை செல்வராஜ், மூவேந்திரன், சோழன் சம்பத், முத்துப்பழனி, குமுளித்தோப்பு மனோகரன், சிவா, அபூர்வமணி,
எம்.ஆர்.எஸ். குமார், தென்னூர் ராஜ்குமார் உள்பட மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி தொண்டரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர துணைச் செயலாளர் எம்.ஏ.எஸ். மணி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* இந்த ஆண்டு நடைபெறவுள்ள தி.மு.க முப்பெரும் விழாவை தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகரத்தின் சார்பாகவும், பகுதி, வட்ட கழகங்களின் சார்பாகவும் வார்டுகளில் கொடி கம்பங்களை புதுப்பித்து கொடியேற்றி வெகு சிறப்பாக கொண்டாடுவது.
* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
* 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கழகத் தலைவர் வேண்டுகோளின்படி 200 தொகுதிகளில் வெற்றி பெற இப்போதிலிருந்து கழகமுதன்மைசெயலாளரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியினை தொடங்கி மீண்டும் கழக ஆட்சி
அமைவதற்கு பாடுபடுவது
* கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Comments are closed.