Rock Fort Times
Online News

1.59 லட்சம் பேர் எழுதிய குரூப் -1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு…!

தமிழகத்தில்  துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன.  இந்த காலியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக தேர்வாணையம் தெரிவித்திருந்தது.  குரூப் 1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.  குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில்  குரூப்- 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.  முதல் நிலை தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்