Rock Fort Times
Online News

நடிகைகள் கேரவனுக்குள் ரகசிய கேமரா: ராதிகாவிடம் கேரள சிறப்பு போலீசார் விசாரணை…!

மலையாள திரை உலகில், நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது. ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி கூட்டத்தில் தமிழ் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு, நான் கேரவனை பயன்படுத்துவதில்லை. ஓட்டலுக்கு சென்று விடுவேன் என கூறினார்.  ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுபற்றி கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதனை  தொடர்ந்து கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய ராதிகாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.  இதைத்தொடர்ந்து ராதிகாவை தொலைபேசியில் கேரள போலீசார் தொடர்பு கொண்டு கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்