திருச்சி சீனிவாச நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 36). தொழிலதிபர். இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், என்னிடம் பலர் இணைந்திருப்பதாக கூறினார். அதன் பேரில் அவரது வாட்ஸ் ஆப் குரூப்பில் வினோத் இணைந்தார். பின்னர் பல்வேறு தவணைகளாக, ரூ.64 லட்சத்து 80 ஆயிரத்தை பங்குச்சந்தையில் வினோத் முதலீடு செய்தார். ஆனால், அதற்கான லாபத்தொகை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் வினோத் கேட்டபோது, மலுப்பலாக பதில் கூறியதோடு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த வினோத் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்திடம் பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.