திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக, பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் உள்ள நேஷனல் பள்ளி மைதானத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று(01-09-2024) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2000 கிலோ மட்டன், 1000 கிலோ சிக்கன், 3000 முட்டை, 200 கிலோ நெய், 200 கிலோ எண்ணெய் என மட்டன் பிரியாணி, சிக்கன் மஞ்சூரியன், தால்சா, பிரட் அல்வா, கோதுமை பீர்ணி, குழி ஆம்லெட், தயிர் பச்சடி, தயிர் சாதம் என 500 சமையல் கலைஞர்களால் தடபுடல் விருந்து தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு மதிய உணவாக சுடச்சுட பிரியாணி மற்றும் உணவு பரிமாறப்பட்டது.


Comments are closed.