திருச்சி மாநகர் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசிய நிர்வாகி சுரேஷ்குப்தா அதிரடி கைது…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று(20-08-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மோகன் பங்கேற்று திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் பேசினர். அப்போது காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா என்பவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான கனிமொழி எம்பி குறித்து சில அவதூறான கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் சுரேஷ்குப்தா மீது குற்ற எண்- 547/24 U/S 296 (b), 192, 352 BNS r/w 4 of TNWPH Act. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்து, அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், அவரை இன்று மதியம் வீட்டிற்கு உணவு அருந்த சென்றவரை பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர், வீட்டில் வைத்து கைது செய்தது முதல், பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததின் காரணமாக, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Comments are closed.