திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடம் அருகே நேற்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாநகராட்சி இளநிலை பொறியாளர் மேற்பார்வையில் பணியாளர்கள் அந்தப் பகுதியில் தடுப்பு அமைத்து பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல இப்பகுதியில் பலமுறை பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இப்பகுதியில் புதை வடிகால் குழாய்களில் சேதமடைந்து அவ்வப் போது உடைப்பு ஏற்படுவதை தடுக்க சாலையின் கீழே உள்ள புதை சாக்கடை குழாய்களை முழுமையாக மாற்றி புதிதாக அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மண்டல தலைவர் ஆண்டாள் ராம்குமார்,
செயற்பொறியாளர் செல்வராஜ் ,உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி , மாமன்ற உறுப்பினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.