திருச்சி பாலக்கரையில் எப்எஸ்எம்எஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் பலர் சீட்டில் சேர்ந்தனர். அவர்களில் துறையூரைச் சேர்ந்த ரவியும் ஒருவர். இவர், இந்த நிதி நிறுவனத்தில் சீட்டு செலுத்தி உள்ளார். ஆனால், அதற்கான காலம் முடிந்த பிறகும் சீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை
. இதுகுறித்து அவர், திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரேமி, துறையூர் கிளை மேலாளர் கௌதமி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்தின் துறையூர், முசிறி உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி, காஜாமலை, மன்னார்புரம், எண்.10 அப்துல் சலாம் தெரு, திருச்சி- 20 என்ற முகவரியிலுள்ள திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆர். சுகந்தியிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed.