Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை மறுதினம் ( ஆகஸ்ட் -21 )குடிநீர் விநியோகம் ரத்து !

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு மின் சப்ளை இருக்காது. ஆகவே திருச்சி மாநகரில் நாளை மறுதினம் (21.08.2024) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.  . எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து  மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்