Rock Fort Times
Online News

போலீசா? வக்கீலா? பார்த்துக்கலாம் – திருச்சி, சமயபுரத்தில் சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வக்கீல் ( வீடியோ இணைப்பு )

திருச்சி, சமயபுரத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு வக்கீல் சக்திவேல் முருகன் என்பவர் போதையில் பைக்கை ஓட்டி வந்துள்ளார். தாறுமாறாக வந்த இவரது பைக், சமயபுரம் டோல் பிளாசா அருகில் மூன்று வாகனங்களின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தது.இது பற்றிய தகவல் அறிந்த சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நித்தியானந்தம், விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளார்.  அப்போது வக்கீலுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.ஒரு கட்டத்தில் வக்கீல் சக்திவேல் முருகன்,வெள்ளை சட்டையா? காக்கி சட்டையா ஒரு கை பார்ப்போம் என சப் இன்ஸ்பெக்டர் நித்யானந்தத்தை மிரட்டியதோடு, விரைவில் உன் காக்கி யூனிஃபார்மை கழட்டுகிறேன் பார் என மிரட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்