நிதிப் பகிர்வில் பாரபட்சம் – மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றம் !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் நூர்கான் தலைமையில் நடைபெற்றது.திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வது,திமுக பவள விழா ஆண்டில், சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில்அனைவரும் திரளாக கலந்து கொள்வது,தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், பாரபட்சம் காட்டுவதை வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது, திருச்சி தெற்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 இடங்களில் கலைஞர் சிலைகளை நிறுவியதுடன், தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்ட கழகமும் செய்திடாத வகையில் ஒரு வருடத்தில் 111 நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

Comments are closed.