திருச்சி, புத்தூர் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பாலன் . 73 வயதான அவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகனான ரமேஷ் (43), பாலனிடம் அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்வார் என கூறப்படுகிறது. அதே போல தனது தந்தையிடம் ரூ.500 தரும்படி கேட்டுள்ளார். பாலன் பணத்தை தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தான் வைத்திருந்த கத்தியை காட்டி தன் தந்தையை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இது குறித்து பாலன் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். தந்தையிடமே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed.