Rock Fort Times
Online News

மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இதன் 2-ம் பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார் மோகன்லால். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், மூச்சுத் திணறல், தசை வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் 5 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்