Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூ.1.40 லட்சம் திருட்டு- விசாரணை நடத்திய போலீசாரை மிரட்டிய திருடன்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் பிரபலமான ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால்  அந்த ஹோட்டலில் விற்பனை குறைவாக நடந்து வருகிறது. அதனால், ஹோட்டலில் புனரமைப்பு பணிகளை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்தநிலையில் ஹோட்டலில் இருந்த  ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு போனது.  இதுகுறித்து கடையின் உரிமையாளர் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின்பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை  ஆய்வு செய்தபோது,  அதில் கடந்த ஒன்றாம் தேதி அன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு நபர் மெதுவாக ஹோட்டலுக்குள் செல்வதும், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் சாரங்கன் என்பவரை போலீசார் பிடித்து  ஹோட்டலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.  ஆனால், தான் திருடிய பணத்தை செலவு செய்து விட்டேன். தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.  பின்னர் அவரை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாரை அவர் மிரட்டி உள்ளார்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாரங்கன், தன்னை சிறை காவலர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருச்சி சிறை டிஐஜி, சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுக்குரிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவர் காவலர்களை மிரட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்