Rock Fort Times
Online News

தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 21-ல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

தமிழகத்தில் ஆக. 21-ல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ”தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட்   21ம் தேதியன்று தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக்குழு முதல்கட்ட கலந்தாய்வை தொடங்குகிறது. முன்னதாக,  ஆகஸ்ட்19ம் தேதி மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.  முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியவுடன், 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கான ஒதுக்கீடு, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீடு என்று 4 பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறும். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவைதவிர, 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு நீட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனது.  உச்சநீதிமன்ற தலையீட்டுக்கு பின்னர் ஆகஸ்ட் 14 முதல் கலந்தாய்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.  மாநிலத்தில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.  அந்தவகையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்ப பதிவு இன்று(31-07-2024) காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது.  இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் யாகஸ்டு 8 வரை விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்