திருச்சியில் புதிதாக ஒரு காவல் நிலையம் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த வகையில் தாம்பரம் ஆணையரகத்தில் சிங்கப்பெருமாள் கோவில், திருமுடிவாக்கம், ஆவடி ஆணையரகத்தில் மௌலிவாக்கம், அயப்பாக்கம், கோவை ஆணையரகத்தில் இருகூர், கலப்பட்டி, கோவை மாவட்டத்தில் நீலாம்பூர்.திருச்சி மாவட்டத்தில் காணக்கிளியநல்லூர், கிருஷ்ணகிரியில் நல்லூர், திருவண்ணாமலை மேற்கு ஆகிய 10 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவல் நிலையம் உருவாக்கப்படவுள்ள காணக்கிளியநல்லூர் அமைச்சர் நேருவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
