திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு தார்சாலை வசதி – மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் கோரிக்கை!
திருச்சி, கண்டோன்மெண்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது.இங்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், கூடுதல் முதன்மை நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், மற்றும் சார்பு நீதிமன்றங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து, குற்ற மற்றும் உரிமையல் வழக்குகளில் ஆஜராகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகிறார்கள்.நீதிமன்ற வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழுதடைந்த தார் சாலையே இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் கோர்ட் வளாகத்திற்குள் வரும் வழக்கறிஞர்கள், போலீசார், மனுதாரர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேடு பள்ளமான சாலைகளில் சிக்கி பைக்குகளில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வசதிக்காக தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் பி.வி வெங்கட், திருச்சி போர்ட் போலியோவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான எம்.எஸ் ரமேஷை சென்னையில் நேரில் சந்தித்து, தார் சாலை வசதி அமைத்து தருவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

Comments are closed.