இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000-த்தை நெருங்குகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,805 ஆக பதிவாகி உள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1890 ஆக இருந்தது. கடந்த 210 நாட்களுக்கு பின்னர் தொற்று அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 78% பாதிப்பு அதிகரிப்பாகும். இந்த நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டியது. தற்போது நாட்டில் கொரோனாவுக்கு 10,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 134 நாட்களுக்கு பின் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 10,300 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
