திருச்சி விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவிற்கு நேரடி விமானம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று(12-06-2024) மதியம் 12-55 மணிக்கு திருச்சியில் இருந்து ஜித்தாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பயணிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே முன்பதிவு செய்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட விமானம் இன்று இரவு 7 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments are closed.