திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைத்திருநகரை சேர்ந்த சந்தியா, பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த மார்கரெட் வனிதா மற்றும் தெற்கு அஞ்சல்காரன் பட்டியை சேர்ந்த அல்போன்ஸ் மேரி ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்த கபிரியேல் மனைவி லாரன்ஸ் சோபியா என்பவர் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், உங்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து ஏமாற்றியதாகவும், பணத்தை திரும்ப கேட்கச் சென்றபோது மிரட்டுவதாகவும், தங்களது பணம் திரும்பக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed.