திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பாதயாத்திரை ஆகவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு நடந்து வரும் பக்தர்கள் திருச்சி சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த தெப்பக்குளம் அருகே வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று(05-06-2024) லோடு ஏற்றும் மினி ஆட்டோ ஒன்று திடீரென பின்னோக்கி நகர்ந்து தெப்பக்குளத்தில் கவிழ்ந்து மூழ்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சரக்கு ஆட்டோவை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர். அந்த சரக்கு ஆட்டோவில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை . சரக்கு ஆட்டோ தானாக நகர்ந்து தெப்பக்குளத்தில் கவிழ்ந்ததா? அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா? என்று சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.