Rock Fort Times
Online News

திருச்சியில் கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்த புரோட்டா மாஸ்டர் குத்திக் கொலை…!

திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி (65).  இவர்,  கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் இரவு நேர டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.  இவர்,  குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த  10 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் வெளியில் தங்கி இருந்தார். நேற்று(22-05-2024) இரவு பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள மருந்தகம் முன்பு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.  அப்போது மர்ம நபர்கள் சிலர்
முகமது அலியை  கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  இதுகுறித்து
தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்