Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு நாளை மாலை அணிவிப்பு- தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் அழைப்பு…!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் 1349- வது சதய விழாவை முன்னிட்டு நாளை (23-05-2024) காலை 8.30 மணி அளவில் திருச்சியில் உள்ள பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்