Rock Fort Times
Online News

மோசமான வானிலை காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கம்- காயம் அடைந்த 2 பயணிகள் உயிரிழப்பு…!

கணிக்க இயலாத காற்று நகர்வுகள் உள்ளிட்ட வளிமண்டல உறுதியற்ற தன்மையால் நேரிடும் நடுவான் கொந்தளிப்புக்கு அவ்வப்போது விமானங்கள்
சிக்குவது உண்டு. அந்தவகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்று (மே 20) கிளம்பியது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பறந்த விமானம், எதிர்பாராத விதமாக நடுவானில் கடுமையான காற்று மற்றும் மோசமான வானிலையை எதிர்கொண்டது. இதனையடுத்து பாங்காக்கின் ஸ்வர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைய, அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பயணிகளில் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தனிக்குழுவை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்