ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 800 ரொக்கமும், 112 கிராம் தங்கமும், 1,123 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 1,088 -ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.ரவிசந்திரன் , மேலாளர் கு.தமிழ்செல்வி ,கண்காணிப்பாளர்கள்மு.கோபலகிருஷ்ணன்,வெ.மீனாட்சி , செ .சரண்யா, துணை மேலாளர் தி.சண்முகவடிவு , ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி,பாஸ்கர் , பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்
