வீடு ஒதுக்கீடு வீடு ஒதுக்கீடு குலுக்கலில் அதிகாரிகள் தன்னிச்சை முடிவை கண்டித்து திருச்சியில் திடீர் முற்றுகை!
திருச்சி காந்தி மார்க்கெட் கல் மந்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகில் கல் மந்தையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியம் சார்பில் 192 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.


இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகள் கட்டப்பட்ட வளாகத்திலேயே குலுக்கல்முறையில் 64 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 148 வீடுகள் ஒதுக்கப்படுவதற்கான குலுக்கல்இன்று அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை வாரிய அலுவலகத்தில் நடத்த அதிகாரிகள் தயாராகினர். இதனை அறிந்த குலுக்கல் மூலம் வீடுகளை எதிர்பார்க்கும் பெண்கள் வழக்கம்போல் கடந்த முறை நடந்த இடத்திலேயே குலு க்கல் நடைபெற வேண்டும் என்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முற்றுகை செய்தவர்களிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர். அப்போதுவரும் திங்கட்கிழமை நிர்வாக பொறியாளர் வந்தவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என்று அலுவலர்கள் உறுதியளித்தனர் .அதன் பின்னர் முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது
