Rock Fort Times
Online News

ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ரயில் பயணியிடம் சங்கிலி பறித்த” பலே ஆசாமி” சிக்கினார்…!

திருச்சியிலிருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் சம்பவத்தன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின்  5-வது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது  அந்த ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த  வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம் தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த  கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலி மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து திருச்சி மாவட்ட 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்