இந்திய நாடாளுமன்ற தேர்தல் இன்று (19-4- 2024) தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் மற்றும் சில தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மதியம் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை முதலே வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றாலும் ஒரு சில இடங்களில் மந்தமாக இருந்தது. சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும் அது சரி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இளம் தலைமுறை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். அந்தவகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி
49.27 % சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 மணி நிலவரப்படி சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு;
ஸ்ரீரங்கம்- 53.44
திருச்சி மேற்கு- 44.57
திருச்சி கிழக்கு- 44.05
திருவெறும்பூர்-48.08
கந்தர்வகோட்டை- 55.09
புதுக்கோட்டை 50.44
Comments are closed, but trackbacks and pingbacks are open.