Rock Fort Times
Online News

தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீவிருது வழங்கிய குடியரசுத் தலைவர்.

தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகரும், கர்நாடக இசைக்கலைஞருமான வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டது. இவரை தவிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், சமூகசேவகர்களும், பாம்புப் பிடி வீரர்களான வடிவேல் கோபால்-மாசி சடையன், பரதநாட்டியக் கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை, மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி உள்ளிட்ட 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்   நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.  நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்