உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா நேற்று இறந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தற்போது கோவை விளாங்குருச்சி பகுதியில் உள்ள இல்லத்தில் அவரதுஉடல் அஞ்சலிக்காக வைக்கபட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளனர்.