திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்தவர் சுந்தர் (27). அப்பகுதியில் மொபைல் கடை வைத்துள்ளார். இவருக்கு, கடந்த வாரம் தான் திருமணம் நடந்தது.
திருமண சீர்வரிசையாக வந்த பணம் மற்றும் நகைகளை வீட்டு பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் தனியறையில் தூங்கினர். சுந்தரின் பெற்றோர் மாடியில் உறங்கியுள்ளனர்.
இன்று விடியற்காலை 4 மணி அளவில் அவரது வீட்டில் ஏதோ பொருட்கள் உருட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது. இதனால், திடுக்கிட்டு எழுந்த சுந்தர் கதவை திறக்க முயன்றபோது அவரது அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் தாயாருக்கு போன் செய்து கீழே வருமாறு அழைத்துள்ளார். அவர் கீழே இறங்கி வந்தபோது வீட்டுக்குள் இருந்து மூன்று, நான்கு கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
இதனால் திருடன்…திருடன்… என கூச்சலிட்ட அவர் மகனின் அறை கதவை திறந்து விட்டார். அவர் வெளியே வந்து திருடர்களை தேடிப் பார்த்தார். ஆனால், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கல்லக்குடி போலீசில் சுந்தர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.