தமிழகத்தில் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் முழு சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழக அரசு இதனை கண்காணித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகத்தில் முடங்கி கிடக்கும் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு அளிக்க லஞ்சம் கேட்டதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூய்மை பணியாளரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது; இந்த சம்பவத்திற்கு காரணமான உடன்குடி பேரூராட்சி தலைவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்றார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் மலக்குழியில் இறங்கி கழிவுகளை அகற்றும் போது உயரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதனே ஆகற்றும் நிலையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ள போதிலும் தமிழக உட்பட சில இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் நிலை தொடர்ந்து வருகிறது.
இது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தூய்மை பணியாளர்களை அந்த பணியில் ஈடுபடுத்தினால் அது தவறான குற்றம் மனிதர்களை அந்த பணியில் ஈடுபடுத்துப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்யும் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கல் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .
மேலும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களின் சமுதாய வளர்ச்சி திட்டத்தில் நிதியின் மூலம் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் முழு சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழக அரசு இதனை கண்காணித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களின் குறைகள் மற்றும் புகார் மீது சுதந்திரமாக உரிய நடவடிக்கை எடுக்க தூய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Post