இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியைச் சேர்ந்த திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், வியாபாரிகள், மார்க்கெட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவாளர்களுடன் நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது துரை வைகோ பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இங்கு நமது முதல்வர் செயல்படுத்தியுள்ள பல திட்டங்களை பிற மாநிலங்களிலும் நடைமுறைபடுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் திமுக மாடல் ஆட்சி நாடு முழுவதும் கனத்தை ஈர்த்துள்ளது. ஆகவே, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
பிரச்சாரத்தின்போது திமுக கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், இந்தியா கூட்டணிக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.