ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். mமதிமுக பொருளாளராக பதவி வகித்து வருபவர் கணேசமூர்த்தி. இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் தார்மீக அடிப்படையில் தேர்தல் பணிகளில் கணேசமூர்த்தி ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், அவர் கடந்த ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் இன்று வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.