1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ,தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொன்விழா ஆண்டின் முக்கிய நிகழ்வாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி சென்னையில் இருந்து காஞ்சிபுரம்,திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக வருகின்ற 28 ந்தேதி கன்னியாகுமரி சென்றடைகிறது. சைக்கிள் பேரணி ஆக வந்த பெண் காவலர்கள் நேற்று மாலை திருச்சி சமயபுரம் வந்தடைந்த சைக்கிள் கண்காணிப்பாளர் சுஜித்குமார் வரவேற்பு அளித்தார் .பின்னர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் நேற்று இரவு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.. இன்று காலை தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் இருந்து எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மதுரை புறப்பட்டனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பெண் காவலர்களுடன் இணைந்து திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி வரை சைக்கிளில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது..
