திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ 1.50 கோடி மதிப்புள்ள நில விற்பனை மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட திருச்சி கே.கே நகரை சேர்ந்த டேனியல் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா். அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்மணி கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில்திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.