*தமிழக தேவேந்திர குல வேளாளர் நல சங்க நிறுவனத் தலைவர் பாச. ராஜேந்திரன் காலமானார்*
தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம், இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரான
திருச்சியை சேர்ந்த, பாச.ராஜேந்திரன் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். ராஜேந்திரன் உடல் திருச்சி கே.கேநகரில் உள்ள கோவர்தன கார்டனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன. மறைந்த பாச.ராஜேந்திரன் அனைத்து தரப்பினருடனும் அன்பாக பழகக்கூடியவர். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி,மூன்று மகன்கள் உள்ளனர் .ஆரம்ப காலத்தில் ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வந்தார். பின்னர்
தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம், இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்ற அமைப்பை துவங்கி, சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இவர்
நீண்ட காலமாக தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்ததோடு அதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிலைகள் அமைக்கும் பணிக்காக தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.