மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்- ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை…!
இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி திருச்சி மாவட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரும், இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டி திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான எம்.பிரதீப்குமார் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது. ரெட்கிராஸ் மோகன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஜவகர்ஹசன் ஆண்டறிக்கை வாசித்தார். முரளிதரன் ஆண்டு கணக்கறிக்கை வாசிக்க தீர்மானங்களை மூத்த உறுப்பினர் இளங்கோவன் வாசிக்க அவை ஏக மனதாக ஏற்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவின் சேர்மன் ஆக இந்திரா கணேசன் கல்லூரியின் செயலர் ஜி.ராஜசேகரன், செயலாளராக ஜவகர்ஹசன், துணைச் சேர்மன் ஆக சவுமா ராஜரத்தினம், பொருளாளராக ஆர்.இளங்கோ, இணை செயலாளராக மோகன் மற்றும் மனோகர்ராஜ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மாவட்ட கலெக்டர் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், போதை பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தையும் நாளைய சமுதாயத்தை தலைசிறந்த சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய சமுதாயத்தினுடைய மாணவர்களை தலைசிறந்த மாணவர்களாக நாம் உருவாக்க வேண்டும். அதில், ரெட்கிராசின் பங்கு இன்றி அமையாதது என எடுத்துரைத்தார். மேலும், பேரிடர் காலங்களில் ரெட் கிராசின் சீரிய சேவைகளை பாராட்டினார். ராஜசேகரன் ஏற்புரை ஆற்றிட, எழில் ஏழுமலை நன்றியுரை ஆற்றினார். விழாவில் பெருந்திரளான ரெட் கிராஸ் பெருமக்கள் பங்கு பெற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.