தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி., அழகிரி மற்றும் திமுக.,வை சேர்ந்தவர்கள் என 17 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி, வல்லடிகாரர் கோயிலுக்குள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனை வீடியோ எடுக்க வந்த மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்துவை முன்னாள் எம்.பி., அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுக.,வை சேர்ந்த சிலர் தாக்கியதாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து 21 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (16-02-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.